இங்கிலாந்து சுற்றுப் பயணத்துக்கான இந்திய கிரிக்கெட் அணியில் வீரர் ஒருவர் கொவிட்-19 தொற்றுக்கு சாதகமாக சோதனை செய்துள்ளார்.
நேர்மறையை பரிசோதித்த வீரர் ஏனைய அணி வீரர்களுடன் இணைந்து டர்ஹாமிற்குப் பயணிக்க மாட்டார் என்று கூறப்படுகிறது.
டர்ஹாமிவுக்கு புறப்படும் இந்திய அணியினர் அங்கு போட்டி நடவடிக்கைளுக்காக வியாழக்கிழமை பிற்பகல் ஒன்றுகூடி பயிற்சி நடவடிக்கைகளை முன்னெடுக்கும்
நியூசிலாந்திற்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் தோல்வியன் பின்னர் இந்திய கிரிக்கெட் வீரர்கள் மூன்று வார இடைவெளியில் இங்கிலாந்தில் தங்கியுள்ளனர்.
கொவிட்-19 டெல்டா மாறுபாட்டு பரவல்கள் அதிகளவில் இங்கிலாந்தில் இருப்பதால் கிரிக்கெட் வீரர்களுக்கு வெளியில் செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
எனினும் யூரோ மற்றும் விம்பிள்டன் போட்டிகளில் சில இந்திய வீரர்கள் பார்வையாளர்களாக பங்கெடுத்தனர்.
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்கு முந்தைய வாரம், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் (ஈசிபி) மூன்று வீரர்கள் மற்றும் நான்கு ஊழியர்கள் உட்பட அணியின் ஏழு உறுப்பினர்கள் கொவிட்-19 க்கு சாதகமாக சோதனை செய்ததை உறுபடுத்தியது.
இதனால் இங்கிலாந்து ஒருநாள் அணி மாற்றி அமைக்கப்பட்டு, பென் ஸ்டோக்ஸ் பாகிஸ்தானுடனான தொடருக்கு அணித் தலைவராக நியமிக்கப்பட்டார்.
இந் நிலையிலேயே இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியில் குறைந்தது ஒரு வீரர் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக கிரிக்பஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆனால் அந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என்றும் கிரிக்பஸ் சந்தேகம் வெளியிட்டுள்ளது.
எந்த வீரர் கொவிட்-19 தொற்றுக்கு நேர்மறையாக பரிசோதித்துள்ளார் என்பதை கிரிக்பஸ் கூறவில்லை, ஆனால் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலுக்காக காத்துள்ளது.