கடந்த வருடம் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘புலி முருகன்’ படத்தில் இருந்து ஜேசுதாஸ் – சித்ரா பாடிய ‘காலனையும் கால்சிலம்பே’ மற்றும் வாணி ஜெயராம் பாடிய ‘மானத்தே மாடக்குரும்பே’ ஆகிய இரண்டு பாடல்களும், புலி முருகன் பின்னணி இசையும் 2018-ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் பரிந்துரைக்கப்பட்டு இருந்தன.
இந்தப்படத்திற்கு கோபிசுந்தர் இசையமைத்திருந்தார். ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் பாடல்கள் பிரிவில் கலந்துகொள்ள இந்தியாவில் இருந்து தேர்வாகியிருக்கும் ஒரே படம் ‘புலி முருகன்’ தான் என ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்தநிலையில் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் இருந்து மோகன்லாலின் ‘புலி முருகன்’ வெளியேறியுள்ளது.. இந்த செய்தி மலையாள ரசிகர்களை சற்றே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.