468 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து 192 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து ஆஸ்திரேலியா அணி 275 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் கடந்த டிசம்பர் 8-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்தை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இதை தொடர்ந்து கடந்த டிசம்பர் 16-ம் தேதி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் தொடங்கிய 2-வது போட்டியில், டாஸ் வென்று முதலில் ஆடிய ஆஸ்திரேலியா அணி, முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 473 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. தொடர்ந்து ஆடிய இங்கிலந்து 236 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதை தொடர்ந்து 2-வது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 230 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து 468 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து 192 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து ஆஸ்திரேலியா அணி 275 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி முன்னிலையில் உள்ளது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]