ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் இடையே ஆஷஸ் தொடரின் 5வது மற்றும் கடைசி டெஸ்ட் சிட்னியில் நேற்று தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 233 ரன் எடுத்திருந்தது.
கேப்டன் ஜோ ரூட் 83 ரன்னில் ஆட்டம் இழந்தார். மலன் 55 ரன்னில் களத்தில் இருந்தார்.
2வது நாளான இன்று மலன் 62, மொயின் அலி 30, கிர்ரன் 39, பிராட் 31 ரன்னில் ஆட்டம் இழக்க இங்கிலாந்து 346 ரன்னில் ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா தரப்பில் கம்மின்ஸ் 4 விக்கெட் எடுத்தார்.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸி. அணியில் பான்கிராப்ட் டக்அவுட் ஆனார்.
12 ஓவரில் அந்த அணி ஒரு விக்கெட் இழந்து 26 ரன் எடுத்திருந்தது.