ஆவா வந்தது எப்படி? பின்னணியில் மஹிந்தவா? – மறைக்கப்படும் உண்மைகள்…!!
இராணுவம், பொலிஸார், போன்றோரை அடிப்படையாக கொண்டு திட்டமிட்டு நாட்டை குழப்ப மஹிந்த தரப்பினரே செயற்பட்டுவருவதாகவும், மஹிந்த தரப்பினருக்கும் இராணுவத்தினரிடையே மிகுந்த செல்வாக்கு இருக்கின்ற காரணத்தினால் இவை இலகுவாகஅரங்கேற்றப்பட்டுக் கொண்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.
தென்னிலங்கை தரப்பு குறித்த ஆவா குழுவிற்கு பொறுப்பு விடுதலைப்புலிகளே என்று கூறிவந்தாலும் அதற்கு மாற்றுக்கருத்தாக இராணுவத்தரப்பினர் செயற்பட்டு வருவதாகவும் ஒருசாரார் தெரிவித்தே வருகின்றனர்.
இதேவேளை ஜனவரி 8ஆம் திகதிக்கு முன்னர் வடக்கில் இவ்வாறான நிலை இருக்கவில்லை.தற்போதே இவர்கள் உருவாகி வருகின்றார்கள். மீண்டும் வடக்கை அழிவுப்பாதைக்கு திட்டம் தீட்டுகின்றார்கள். என நேற்றைய தின பாராளுமன்ற உரையில் விமல் தெரிவித்தார்.
ஆனாலும் யுத்தம் நிறைவடைந்ததற்கு பின்னரே வாள்வெட்டு குழுக்கள் யாழில் தலைதூக்கியது அதாவது கடந்த கால ஆட்சியில் பதற்ற நிலையை தோற்றுவிப்பதற்காகவே இவை உருவாக்கப்பட்டது என்பதே உண்மை. இதன் மூலம் விமலின் ஆட்சிக்கு எதிரான திசை திரும்பல் பொய்த்துப் போய் விட்டது எனலாம்.
ஆனாலும் வடக்கில் இந்த ஆவா குழு என்பது யுத்த நிறைவுக்கு பின்னரே உருவாகியது. உண்மையில் இந்த ஆவா என குழு ஒன்று இல்லை இந்தப் பெயரை உருவாக்கியவர்கள்இராணுவத்தினரே எனவும் கூறப்படுகின்றது.
2013இல் யாழில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய வினோத் என்பவர் தேடப்பட்டு வந்துள்ளார். அவர் பொலிஸாரினால் ஹாவா என அழைக்கப்பட்டுள்ளார். ‘ஹாவா” என்றால் முயல், முயல் போன்று பதுங்கிக் கொள்பவர் என்பதால் அவர் இவ்வாறு பொலிஸாரினால் அழைக்கப்பட்டுள்ளார்.
பின்னர் அந்த பெயர் ஆவா குழு என மாற்றப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகின்றது. மேலும் 2014ஆம் ஆண்டு ஜனவரியில் 13 பேர் கொண்ட குழு கைது செய்யப்பட்டதும் அறிந்த விடயமே.
தற்போது அண்மையில் யாழ் பொலிசார் திட்டமிடப்பட்டு வெட்டப்பட்டு பின்னர் அதற்கு ஆவா குழு என்ற குழு பொறுப்பேற்று துண்டுப்பிரசுரம் வெளியிடப்பட்ட பின்னரே ஆவா என்ற பெயர் தென்னிலங்கையில் பரப்பப்படுகின்றது.
மேலும், இது வரை நடந்த வாள் வெட்டுகளும் எம்மால் நிறைவேற்றப்பட்டதே அதற்கு காரணம் உண்டு. அப்போது எம்மை பறைசாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட வில்லை என தெரிவித்த ஆவா குழுவிற்கு தற்போது ஏன் பெருமை தேவைப்படுகின்றது என்ற கேள்வியும் எழுகின்றது.
இதன் மூலம் பதற்றத்தை மேலும் தூண்ட அரங்கேற்றப்பட்ட நாடகமே இந்த ஆவா குழு என்பது தெளிவாகின்றது.
மேலும் நிறைவேறிய கொலைகள் தென்னிலங்கையில் வேறு விதமாக பரப்பப்படுகின்றது. துண்டுப்பிரசுரத்திற்கு பின்னர் வந்த ஆவா குழு என நினைத்து தான் யாழில் இருவரை சுட்டதாக பொலிஸார் தற்போது தெரிவித்துள்ளனர் முதலில் விபத்து, பின்னர் உத்தரவை மீறியதால் சூடு,தற்போது ஆவா இவை முற்று முழுதாக குற்றவாளிகளை தப்பவைக்கும் முயற்சிகளே.
அதே போன்று குறித்த மாணவர்கள் இருவரும் பயணம் செய்த மோட்டார் சைக்கிள் 1000 சீ.சீ ரக அதி வேக மோட்டார் சைக்கிள் என சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனாலும் அந்த மோட்டர் வண்டிகள் 100 சீசீ வண்டி மாத்திரமே.
இதேவேளை அனைத்தையும் விடுத்து தென்னிலங்கையில் வடக்கில் விடுதலைப்புலிகள் உள்ளார்கள் மீண்டும் விசாரணைகள் நடத்தவேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்து வருகின்றது.
அவ்வாறு விசாரணைகள் நடத்தப்பட்டுவிட்டால் தற்போது உருவாக்கப்பட்டுள்ள அமைதி நிலையை மீண்டும் குழப்பி கலவரங்களை ஏற்படுத்த முடியும் அந்த நிலை உருவகம் பெற்று விடுமானால் ஆட்சி மீது நம்பிக்கை அற்ற தன்மையை மக்கள் மத்தில் பரப்பி இலகுவாக ஆட்சியை கைப்பற்றிவிட முடியும்.
இவ்வாறான காரணங்களை அடிப்படையாக கொண்டு நோக்கும் போது முதலாவதாக யாழில் மாணவர்கள் கொல்லப்பட்டது, பின்னர் அதனைக் காரணம் காட்டி பொலிஸார் வெட்டப்பட்டது, அடுத்து ஆவா என்ற குழு உள்ளே வந்தது, தென்னிலங்கை வெட்டிய பொலிஸாருக்கு நீதிகோரி ஆட்சி மீது குறை கூறி குழம்பியமை தற்போது விடுதலைப்புலிகள் மீது பழி.
இவை அனைத்துமே ஆட்சி கைப்பற்றளுக்கான செயற்பாடுகள் மட்டுமே என்பது தெளிவாக வெளிப்படுத்தப்படுகின்றது குறிப்பாக இந்த குற்றங்களுடன் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யாவிடின் இந்த பிரச்சினை இத்தோடு நின்றுவிடாது.
மேலும் இதனை காரணம் கூறி ஆங்காங்கே உயிர்ச் சேதங்களை ஏற்படுத்தி பதற்ற நிலையை தோற்றுவித்து ஆட்சி கைப்பற்றல் நோக்கத்திற்காக செயற்பட ஏற்பாடுகள் நடைபெறும். எனவும் தென்னிலங்கை புத்திஜுவிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.