ஆவாவையும் பிரபாகரன் படையையும் இயக்குபவர் வடக்கு முதல்வர் …!! பழிபோடுகின்றவர்கள் யார்?
அண்மையில் யாழில் மரணித்த இரு மாணவர்கள் தொடர்பில் முழு பொறுப்பும் சீ.வி.விக்னேஸ்வரன் சாரும் என பிரபல சிங்கள ஊடகம் ஒன்றான நெத் எப் எம் மூலமாக தகவல் வெளியிட்டுள்ளது.
விடுதலைப்புலிகள் மீண்டும் உருவாக்கப்பட்டு வருகின்றனர். ஆவா குழுவோடு விக்னேஸ்வரனும் இணைந்து சதித்திட்டங்களை தீட்டி வருகின்றார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் யாழில் மாணவர்கள் சுடப்பட்டதற்கு முதல் நாள் யாழில் பொலிஸார் அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது தமது குற்றங்களை மறைத்துக்கொள்ள குறித்த இளைஞர்கள் தப்பிச் செல்ல முற்பட்டிருக்கலாம் அதன் காரணமாகவே அவர்கள் சுடப்பட்டிருக்கலாம் எனவும் குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து, தற்போது புதிதாக உருவாகியுள்ள ஆவா குழு மற்றும் பிரபாகரன் படை போன்றவை வடக்கு முதல்வரின் செயற்பாடுகள் எனவும் அவர்களுக்கு பின்னணியில் இருந்து ஆதரவாக செயற்படுபவர்கள் பிரித்தானிய பாராளுமன்றத்தில் இருக்கின்ற சிலர்.
அண்மையில் பிரித்தானியா பாராளுமன்றத்திற்கு உள்ளேயே பௌத்தர்களுக்கு எதிராக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இது போன்று சிங்களவர்களுக்கு எதிரான பல செயற்பாடுகள் அங்கிருந்தே நிறைவேற்றப்படுகின்றது.
பிரித்தானியா இவற்றிக்கு உடந்தையாக இருக்கின்றது அங்கிருந்து இலங்கையில் மீண்டும் யுத்தம் ஆரம்பிக்க சதி செய்யப்பட்டு கொண்டு வருகின்றது. பிரித்தானியா நாட்டோடு இணைந்தே விடுதலைப்புலிகள் மீண்டும் உயிர்ப்பித்து கொண்டு வருகின்றார்கள்.
வடக்கில் உள்ள முன்னாள் விடுதலைப்புலிகள் இதற்கு ஆதரவாக இருக்கின்றனர். ஆவா குழு மற்றும் பிரபாகரன் படை, விக்னேஸ்வரன் படை போன்ற அனைத்தும் அழிக்கப்பட வேண்டும்.
தற்போது வடக்கு விடுதலைப்புலிகளுக்கு தலைமைத் தாங்கும் விக்னேஸ்வரன் சம்பந்தன் போன்றோர் கட்டுப்பாட்டில் இருக்கின்றது அதனை மீட்டெடுக்க வேண்டும்.
அரசியல் தலைமைகள் நாட்டின் பாதுகாப்பு நிலையாக காணப்படுகின்றது எனக் கூறினாலும் நாட்டில் மீண்டும் யுத்தம் ஏற்படும் சாத்தியக்கூறுகளே அதிகமாக காணப்படுகின்றது எனவும் அந்த ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வடக்கினை அப்படியே விட்டுவிட முடியாது அதற்கு எதிராக அரசு முடிவெடுக்கின்றதோ இல்லையோ சிங்கள மக்கள் ஒன்று திரண்டு மீண்டும் வடக்கை கைப்பற்றிக் கொள்ள வேண்டும் எனவும் அந்த ஊடகம் மூலமாக செய்திகள் பரப்பப்பட்டு கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வடக்கில் அபாயகரமான நிலையை தோற்றுவித்து நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்துவதோடு அதற்கு பொய்யான காரணங்களை முன்வைத்து குழப்பங்களை ஏற்படுத்தப்பட்டு வருகின்றதாகவும் தென்னிலங்கை தமிழ் சிங்கள புத்திஜுவிகள் கருத்து தெரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இவ்வாறான செய்திகள் மூலமாக நாட்டில் இனவாதம் தூண்டப்படும் வாய்ப்புகளும் அதிகமாக இருப்பதாக கூறப்படுகின்றது.