மது குடித்தால் உடல்நலத்திற்குகெடு என்று எல்லோறும் அறிந்த ஒன்று, ஆனால் மதுவில் உள்ள ஆல்கஹால் நினைவாற்றல் மற்றும் கற்றல் திறனை அதிகரிக்கும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மது குடிப்பது உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும், வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு என்பன போன்ற பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் மதுவில் உள்ள ஆல்கஹால் மனிதர்களின் நினைவாற்றலை அதிகரிப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்தில் உள்ள எஸ்டர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் 88 பேரிடம் இது குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவர்களே விரும்பி ஆர்வத்துடன் அதிக அளவு மது குடிப்பவர்கள் ஒருவகையும், மற்றொருவகை சிறிதளவு மது குடிப்பவர்கள் என்றும் 2 வகையாக பிரித்துள்ளனர்.
அதிக அளவு மது குடித்தவர்களை விட சிறிதளவு மது குடித்தவர்களுக்கு நினைவாற்றல் சக்தி அதிகரித்து இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அதிக அளவு மது குடித்தவர்களின் உடல் நலம், மனநலம், நினைவாற்றல் போன்ற பல்வேறு பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருப்பது இந்த ஆய்வில் தெரியவந்தது.