ஆர் பார்த்திபன் நடித்து, இயக்கிய ‘இரவின் நிழல்’ படத்தின் இசை வெளியீடு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இயக்குநரும், நடிகருமான ஆர். பார்த்திபன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘இரவின் நிழல்’. இதில் ஆர் பார்த்திபன், வரலட்சுமி சரத்குமார், பிரிகிடா சகா, அனந்த கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஆர்தர் வில்சன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கும் ‘இசைப்புயல்’ ஏ. ஆர். ரகுமான் இசையமைத்திருக்கிறார். நான் லீனியர் சிங்கிள் ஷாட் என்ற பாணியில் முதன்முறையாக தயாரிக்கப்பட்ட இந்த திரைப்படத்தை பயாஸ்கோப் பிலிம்ஸ் ப்ரேமர்ஸ் மற்றும் அகிரா பிலிம் புரொடக்சன்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.
நான் லீனியர் சிங்கிள் ஷாட் பாணியில் எடுக்கப்பட்ட இந்த ‘இரவின் நிழல்’ படத்தின் சிங்கிள் டிராக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீடு நேற்று சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவில் பொலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் சிறப்பு அதிதியாக பங்குபற்றினார்.
படத்தைப் பற்றி ஆர். பார்த்திபன் பேசுகையில், ” எம்மிடம் சினிமா எடுப்பதற்கு காசில்லை. ஆனால் வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று தான் சிங்கிள் ஷாட் படம் எடுத்தேன்.
அதற்கு எனக்கு மிகப்பெரிய ஆதரவு தேவைப்பட்டது. அந்த பேராதரவு ஏ ஆர் ரகுமான் தான். கடவுளை கூட அபிஷேகம் செய்து ஏமாற்றி விடலாம். ஆனால் ஏ. ஆர். ரகுமானை ஏமாற்ற இயலாது’ என்றார்.