ஏப்பிரல் 2 ம் திகதி முதல் அமைதியாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களை ஒடுக்குவதற்கும், நாடு பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கள் துயரங்களை வெளிப்படுத்துவதை தடுப்பதற்கும் அவசரகால சட்டத்தினை விரிவாக நீடித்த காலத்திற்கு தொடர்ச்சியாக இலங்கை அதிகாரிகள் பயன்படுத்துவதை ஐக்கியநாடுகளின் மனித உரிமை நிபுணர்கள் கண்டித்துள்ளனர்.
தலைநகர் இலங்கையிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் பல மாதங்களாக இடம்பெற்ற பாரிய மக்கள் போராட்டத்தை தொடர்ந்து ஜனாதிபதி ராஜபக்ச பதவியை இராஜினாமா செய்தார் நாட்டை விட்டு வெளியேறினார்.
அவருக்கு பின்னர் ஜனாதிபதியாக பதவியேற்ற ரணில்விக்கிரமசிங்க ஜூலை 17 ம் திகதி இன்னுமொரு அவசரகால சட்டத்தினை அறிவித்தார் குழப்பங்களில் ஈடுபடுபவர்களிற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக அறிவித்தார்.
ஜூலை 27 ம் திகதி இலங்கை நாடாளுமன்றம் அவசரகாலசட்டத்தை நீடித்து அனுமதி வழங்கியுள்ளதுஈ ஊரடங்கு சட்டத்தை விதித்தல் பாதுகாப்பு படையினருக்கு பரந்துபட்டதங்கள் விருப்பத்தின்படி செயல்படுவதற்கான அதிகாரங்களை வழங்குதல், இந்த அதிகாரங்கள் நீதிமன்றத்தின் அனுமதியின்றி வீடுகள் அலுவலங்கள் கட்டிடங்களை சோதனையிடுவதற்கும் போராட்டக்காரர்களை தடுத்து வைப்பதற்குமான அனுமதியை வழங்குகின்றது.
அவசரகாலச்சட்டத்தை தவறாக பயன்படுத்துவது தொடர்பில் நாங்கள் இலங்கை அரசாங்கத்திடம் பல முறை சுட்டிக்காட்டியுள்ளோம் ஆனால் அதனால் பயனில்லை, அமைதியாக ஒன்று கூடல் கருத்துசுதந்திரத்திற்கான உரிமைகளை சட்டபூர்வமாக பயன்படுத்துவதை மீறும் வகையில் அவசரகால சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களை தொடர்ந்து பயன்படுத்துவதை கண்டிக்கின்றோம் எனவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் மிக நீண்டகால அவசரகால சட்டம் துஸ்பிரயோகம் செய்யப்பட்டதை கருத்தில்கொள்ளும்போது- ஐநா நிபுணர்கள் இதனை நன்கு ஆவணப்படுத்தியுள்ளனர்,
பலவிதமான மனித உரிமைகளை பயன்படுத்துவதற்கு அவசரகால சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் குறித்து ஐநா நிபுணர்கள் கரிசனை வெளியிட்டுள்ளனர்.
அவசரகால சட்டத்தின் கீழ் நலிவடைந்தவர்கள் மற்றும் சிறுபான்மையினத்தவர்கள் இலக்குவைக்கப்படுவதாக வெளியாகும் தகவல்கள் குறித்தும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
சர்வதேச சட்டத்தின் கீழ் அவசரகால சட்டத்தினை பயன்படுத்துவதற்கான நடைமுறை தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.