ஆர்சனிக் விஷம் கலந்த கல் திருடப்பட்டுள்ளது.பொலிசார் எச்சரிக்கை!
கனடா–விஷம் கலந்த தாதுப்பொருள் ஒன்று டவுன்ரவுனில் திருடப்பட்டு விட்டதாகவும் இதனை தொடவேண்டாம் எனவும் பொலிசார் பொது மக்களை எச்சரிக்கின்றனர்.
இருதய வடிவம் கொண்ட இக்கல் கிட்டத்தட்ட 8×10 சென்ரிமீற்றர்கள் அளவுடையதுடன் ஆர்சனிக் கொண்டிருப்பதால் பாதுகாப்பு பூச்சு பூசப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
சரியான முறையில் கையாளப்பட வில்லையெனில் வெளிப்பூச்சு உடைந்து ஆர்சனிக்கை வெளிப்படுத்தி விடும் இந்த ஆர்சனிக் ஒரு ஆற்றல் மிக்க விஷம். உட்கொள்ள பட்டால் மரணம் விளைவிக்க கூடியது-முக்கியமாக பிள்ளைகளிற்கு என பொலசார் எச்சரித்துள்ளனர்.
இத்தாதுப்பொருள் அக்டோபர் 15 11மணிக்கும் பிற்பகல் 2மணிக்கும் இடையில் களவாடப்பட்டுள்ளது.
தகவல் தெரிந்தவர்கள் பொலிசாருடன் 416-808-5200 என்ற இலக்கத்தில் அல்லது அனாமதேயமாக கிரைம் ஸ்ரொப்பஸ் 416-222-TIPS (8477).என்ற இலக்கத்தில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகின்றனர்.