விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் தினமும் ஒரு டாஸ்க் வைத்து, அதில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுப் பொருட்கள் தரப்படும்.
இந்தநிலையில், இன்றைய டாஸ்க்காக மனநிலை மருத்துவமனையாக மாறியது பிக்பாஸ் வீடு.
இதில், மனநிலை மருத்துவராக வையாபுரியும், செவிலியராக பிந்துமாதவியும், வார்டு பாயாக கணேஷ் மற்றும் சக்தியும், மற்றவர்களெல்லாம் பைத்தியமாகவும் நடிக்க வேண்டும்.
இவர்களில் ஆரவ், இயக்குநராக முயற்சி செய்யும் பைத்தியமாகவும், ரைசா அழகுராணி பைத்தியமாகவும், ஜூலி போராளி பைத்தியமாகவும் நடிக்கின்றனர்.
நடிகை ஓவியா மட்டும், காதல் தோல்வியால், பைத்தியமாகி, தனது காதலனை தேடும் பைத்தியமாக நடிக்கிறார்.
இதில்,காதலில் தோல்வியடைந்து பைத்தியமான ஓவியா, தனது காதலனாக ஆரவ்வை நினைத்துக் கொண்டு அவர் பின்னாடியே சுற்றித்திரிக்கிறார்.
இதனால், ஓவியா ஆரவ்வை உண்மையாகத் தான் காதலிக்கிறாரோ? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.