ஆரம்ப பாடசாலைகளின் கல்வி தரத்தை மேம்படுத்துவதற்காக கல்வி அமைச்சும், சிறுவர் மற்றும் மகளிர் அலுவல்கள் அமைச்சும் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளது.
குளியாப்பிடியவில் நடைபெற்ற வைபவம் ஒன்றிலேயே கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
ஆரம்ப பாடசலை கல்வியின் மூலமே மாணவர்களின் வாழ்க்கை அடிப்படை வகுக்கப்படுவதனால் ஆரம்ப பாடசாலை கல்வி என்பதில் கூடுதலான கவனம் செலுத்தப்படல் வேண்டும் என்று அமைச்சர் சுட்டிக்காட்டினர்.
இதனால் ஆரம்ப பாடசாலை கல்விக்கான ஆசிரியர்களுக்கு சரியான முறையில் பயிற்சி வழங்கப்பட வேண்டும். ஆரம்ப பாடசலைகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்க வேண்டும் என அமைச்சர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.