வவுனியா கிடாச்சூரி கிராமத்தில் 06 மாலை 5.30 மணிக்கு தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பின் பிரதேசசபை வேட்பாளர் அருளானந்தம் அருந்தவராசவை ஆதரித்து பேசிய பிரச்சாரக் கூட்டத்திலேயே வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன்
இலங்கையில் இனக்கலவரம் ஆரம்பித்த காலம் தொடக்கம் தமிழ் இளைஞர்கள் பல்வேறு இயக்கங்களில் சேர்ந்து ஆயுதம் தூக்கி போராடினார்கள். ஆனால் அந்த இளைஞர்களின் தாய் தந்தையர்கள் சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலோ, ஐக்கிய தேசியக் கட்சியையோ அல்லது இடதுசாரிக் கட்சியை சேர்ந்தவர்களோ கிடையாது. தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் தமிழரசுக்கட்சியின் பாரம்பரியத்தை சேர்ந்தவர்கள்தான் வன்னியில் வாழ்ந்து வந்த மக்கள் அந்தவகையில் ஆயிரக்கணக்கான இளைஞர்களை ஆயுதம் தூக்க வைத்தவர்கள் கூட இந்தப் பாரம்பரியத்தில் வந்த கட்சிகள்தான். ஒரு கட்டத்தில் தனது அகிம்சைப்போர் தோத்ததின் பின்னர் தந்தை செல்வநாயகம் தெரிவித்திருந்தார். இளைஞர்கள் என்னைப்போல் பேச மாட்டார்கள் வேறொரு மொழியிலே பேசுவார்கள் என தெரிவித்து ஆயுதப்போராட்டத்திற்கு பிள்ளையார் சுழி போட்டவர் தந்தை செல்வா என்பதுடன் அவர்கள் போட்ட பிள்ளையார்சுழிதான் முப்பது வருட காலத்தில் ஆயுதப்போராட்டம் உச்சகட்டத்தை அடைந்த நிலையில்தான் உலகம் தமிழ் மக்களை திரும்பி பார்த்தது. தமிழ் மக்களுக்கு இந்த நாட்டிலே பல்வேறு மனித உரிமைகள் மீறப்பட்டது படுகொலைகள் நடைபெற்றது இன அழிப்பு நடைபெற்றது என்பது ஆயுதப்போராட்டத்தின் மூலமே உலகுக்கு உணர்த்தப்பட்டது.
தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து நீண்ட சகிப்புத்தன்மையுடன் இருந்தோம். மக்கள் எங்களுக்கு கொடுத்த ஆணையை ஏற்று கிட்டத்தட்ட பதினாறு வருடங்களாக தமிழ்தேசிய கூட்டமைப்பில் ஒரு சர்வதிகார தலைமையின் கீழ் நாங்கள் இருந்தோம். தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒற்றுமை குலையக் கூடாது எங்கள் மக்களுக்கு ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காக நீண்ட பொறுமை காத்திருந்தோம் அத்துடன் முடிந்த அளவு இந்த சர்வதிகாரத் தலைமையை திருத்துவதற்கு முயற்சி எடுத்தோம் தமிழ் தேசிய கூட்டமைப்பில் ஜனநாயகம் இல்லை வெளிப்படைத்தன்மை இருக்கவில்லை என சுட்டிக்காட்டினார்.
சிறிலங்கா அரசு பேச்சு சுதந்திரத்தை மற்றும் எழுத்து சுதந்திரத்தை மறுத்திருந்தது. பல ஊடகவியலாளர்கள், புத்திஜீவிகளை கொலை செய்திருக்கிறார்கள் என்று நாங்கள் பேசிக்கொண்டு இருக்கும்போது மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினரின் சிறப்புரிமையை கூட இலங்கை பாராளுமன்ற அரசியல் வரலாற்றில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர் ஒருவர் உரையாற்றுவதை மறுத்ததன் மூலம் சம்பந்தன் ஐயா தனது அரசியல் வாழ்க்கையில எதிர்க்கட்சி தலைவராக தமிழ் மக்களின் தலைவராக கூட்டமைப்பின் தலைவராக அவருடைய அத்தியாயத்தில் கறைபடிந்த வரலாறாகியுள்ளது. ஆகவே இவ்வாறான அடக்குமுறையுள்ள சர்வதிகார முறைமையுடைய ஒரு கூட்டுக்குள் நீண்டகாலமாக சகிப்புத்தன்மையுடன் இருந்தோம்.
தமிழ் மக்களின் தலையில் மண்ணை அள்ளி போடுவதற்கு ஒன்றுமில்லாத இடைக்கால அறிக்கைக்கு மக்களின் ஆணையை பெற்றுக்கொள்வதற்காக எடுத்த முயற்சியானது ஒட்டு மொத்த தமிழ் மக்களையும் குழி தோண்டி புதைக்கின்ற ஒரு செயற்பாட்டுக்குத்தான் முயற்சி செய்கிறார்கள். இத்தேர்தல் முடிந்ததன் பிற்பாடு ஐ.நா.மனித உரிமைப் பேரவை இலங்கை அரசாங்கம் தொடர்பான ஒரு அறிக்கையை சமர்ப்பிக்க இருக்கிறது. ஏற்கனவே இரண்டுவருடகால நீடிப்புடன் மீண்டும் எமது பாராளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்களின் கையொப்பத்துடன் மீண்டும் இரண்டுவருடம் கால நீடிப்பு வழங்கப்ட்டுள்ளது.
ஐநாவின் அறிக்கையிலிருந்து தப்பிப்பதற்காக இலங்கை அரசு தமிழரசுக்கட்சியை பயன்படுத்தி இத்தேர்தலில் ஒன்றுமேயில்லாத இடைக்கால அறிக்கைக்கு தமிழ் மக்கள் ஆணை வழங ;கியுள்ளார்கள் ஆகவே சிங்களத் தலைவர்களும் தமிழ்த் தலைவர்களும் இணைந்ததான் புதிய அரசியல் யாப்பை கொண்டு வந்திருக்கிறோம் ஆகவே இந்த யாப்பினூடாகத்தான் பிரச்சனைகளுக்கு தீர்வை காண உள்ளோம் என ஒரு செய்தியை அரசாங்கமும் தமிழரசுக் கட்சியும் சர்வதேச சமூகத்திற்கு எடுத்துச்சொல்ல தயாராக இருக்கிறார்கள். ஆகவே அப்படிப்பட்ட ஒரு படுபாதகமான வேலைக்கு நாங்கள் துணைபோக கூடாது. ஐநா மனித உரிமைகள் சபையால் அறுவது வருடங்களாக தீர்க்க முடியாமல் இருக்கும் இப்பிரச்சனையை குறைந்தபட்சம் சர்வஜன வாக்கெடுப்பொன்றினூடாக இந்த நாட்டிலே சிங்கள மக்களும் தமிழ் மக்களும் ஒன்றாக இருப்பதா பிரிந்து வாழ்வதா என்ற சர்வஜன வாக்கெடுப்பை கூட இல்லாமல் பண்ணுகின்ற இந்த இடைக்கால அறிக்கைக்கு நாங்கள் வாக்களிப்போமாக இருந்தால் அந்தச் சர்ந்தப்பமும் இல்லாமல் போகக் கூடிய ஒரு மோசமான நிலைமை ஏற்பட்டுள்ளது.
ஆகவே இந்தத் தேர்தலானது இப்பிரதேங்களின் அபிவிருத்தியுடன் மட்டுமல்லாது ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வை எட்ட வேண்டும் அதே போல் தமிழ் மக்களுக்கான ஒரு பதிய மாற்று அரசியல் தலைமை வேண்டும். நாங்கள் தமிழரசுக்கட்சி அழிந்து போகவேண்டும் என்று ஒரு காலமும் நினைக்கவில்லை அவர்கள் திருந்த வேண்டும் என்பதற்காகவே கடந்த பதினாறு வருடங்கள் உட்கட்சி போராட்டத்தை நடத்தினோம். நான்கு சுவர்;களுக்குள்ளே பல கருத்து பரிமாற்றங்களை செய்தோம், பல விமர்சனங்களை முன்வைத்தோம் ஆனால் எதையும் அவர்கள் கவனத்தில் கொள்ளவில்லை. பொது மக்களால் மாத்திரமே இந்த சர்வதிகாரத் தலைவர்களையும் மேட்டுக்குடி கட்சியையும் திருத்த மக்களுடைய புள்ளடிதான் கடைசி ஆயுதமாக இருக்கிறது. ஆகவே ஒரு சந்தர்ப்பத்தை இவர்களுக்கு வழங்குவோம் நை;து வருடங்கள் வீட்டிலிருந்து சிந்திக்கட்டும் எங்கு தவறு விட்டோம் அந்த தவறை திருத்துவதற்காக உங்கள் புள்ளடியை ஆயுதமாக பயன்படுத்துங்கள் என வேண்டகோள் விடுத்தார்.
சிங்கள மக்களுக்கு ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் சிறிலங்கா சுதந்திரக்கட்சி ஆகிய இரண்டு தெரிவுகள் உள்ளன மாறி மாறி ஆட்சிக்கு கொண்டு வருவார்கள் அப்படிப்பட்ட ஒரு தெரிவு தமிழ் மக்களுக்கும் வேண்டும் அப்போதுதான் அரசியல்வாதிகள் அரசியல் கட்சிகள் தங்கள் தவறுகளை திருத்துவார்கள் என தெரிவித்தார்.