தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் ஆயுததாரிகளால் கொல்லப்பட்டார்கள் என்று வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.அஸ்மின் முகநூலில் கடந்த 3ஆம் திகதி பதிவிட்டிருந்தார்.
‘ஆயுததாரிகள்’ என்று குறிப்பிட்டதற்கு முஸ்லிம் சமூகத்தினரிடமிருந்து எதிர்ப்புக்கள் கிளம்பியதும், அவர் தனது முகநூல் பதிவை நீக்கியுள்ளார்.
‘1990ஆம் ஆண்டு ஓகஸ்ட் 3ஆம் திகதி தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த முஸ்லிம்கள் ஆயுததாரிகளால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார்கள் என்று தனது முகநூலில் மாகாண சபை உறுப்பினர் அஸ்மின் பதிவு செய்திருந்தார்.
இந்தப் பதிவுக்கு முஸ்லிம் மக்களிடமிருந்து கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டது. ‘ஆயுததாரிகள்’ என்று மொட்டையாக ஏன் பதிவு செய்தார் என்று அவர்களால் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. இதற்குப் பதிலளிக்கும் விதமாக, 1990ஆம் ஆண்டு கிழக்கில் இடம்பெற்ற முஸ்லிம்கள் மீதான படுகொலைகளுக்கு புலிகளே காரணம் எனப் பொதுவாக நம்பப்பட்டாலும் அதனைப் புலிகள் ஏற்றுக் கொள்ளவில்லை.
பொதுவாக மக்கள் கருதுவதற்கு பல்வேறு காரணங்களும், நியாயப்பாடுகளும் இருக்கின்றன என்பது உண்மையே. ஆனால் உரிய விசாரணைகளின்படி இதுவரை நிரூபிக்கப் படவில்லை. இவ்வாறான நிலை யில் ஒரு சாராரை நோக்கி விரலை நீட்டுவதை விடவும் பொதுவாக ஆயுததாரிகள் என்று குறிப்பிட் டுள்ளேன்.