சிம்பு மிகவும் ஜாலியான மனிதர். ஆனால், சமீப காலமாக அவர் மிகவும் அமைதியாகிவிட்டார், ஆன்மிகம் பக்கம் சென்றதிலிருந்து அவர் எந்த ஒரு வம்புகளிலும் சிக்கவில்லை.
இந்நிலையில் சிம்பு சினிமாவில் நடிக்க வந்த தருணத்தில் நடிகர் சங்கம் ஒரு வெளிநாடு ட்ரீப் ஏற்பாடு செய்தது, அதில் சிம்பு அனைத்து நடிகர், நடிகைகளையும் பேட்டி எடுப்பது போல் கலாட்டா செய்தார்.
இதில் நடிகை த்ரிஷாவிடம் அருகில் இருந்த தொகுப்பாளர் ஒருவர் ‘லுசுப்பொண்ணு யார் என்று தெரிந்துவிட்டது, லூசுப்பயன் யார்?’ என கேட்டார்.
அதற்கு த்ரிஷா என்ன சொல்வது என்று தெரியாமல் முழிக்க, உடனே சிம்பு ‘அட நான் தாங்க அந்த லூசுப்பயன்…போதுமா?’ என கூறி அந்த இடத்தைவிட்டு கிளம்பினார்.