மேற்கு ஆப்ரிக்க குடியசு நாடான மாலி, ஆப்ரிக்க கண்டத்தில் 8-வது பெரியநாடு ஆனால் ஐ.எஸ்.தீவிரவாதிகளால்அமைதியை இழந்து தத்தளித்து வருகிறது. எந்த காரணமும் இன்றி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். மாலியின் வடக்குப்பகுதி முழுவதும் இன்னமும் ஐ.எஸ்.கட்டுப்பாட்டில் உள்ளது.தற்போது தேசத்தின் தெற்கு பகுதியில் மக்கள் அதிகம் வசிக்கும் இடங்களிலம் ஆதிக்கம் செலுத்த முயற்சித்து வருகின்றனர். நேற்று முன்தினம் பர்கினோ பசோ தேச மக்கள் மாலி எல்லையில் வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது எல்லையில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் புதைத்திருந்த கண்ணிவெடியில் வாகனம் சிக்கி வெடித்தது. இதில் அந்த வாகனத்தில் சென்ற 25 பேர் பலியாகினர். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.