அமெரிக்காவின் கலிபோர்னியாவில் Apple Worldwide Developers Conference மாநாடு யூன் 5ம் திகதி முதல் 9ம் திகதி வரை நடைபெறுகிறது.
முதல்நாளில் ஆப்பிளின் தலைமை செயல் அதிகாரி டிம் குக், புதிய இயங்குதளங்கள் மற்றும் சாதனங்களை அறிமுகம் செய்தனர்.
Apple tvOS
இதில் அதிகப்படியான தரவுகள், அமேசானின் ப்ரைம் வீடியோ சேவை வழங்கப்படுகிறது, ஆப்பிள் டிவி மற்றும் மேம்படுத்தப்பட்ட ஆப்பிள் டிவி செயலியில் இதன் சேவைகள் வழங்கப்படும்.
Watch OS 4
அனைவரையும் கவரும் வகையில் ஒருசில மாற்றங்களுடன் வாட்ச் ஓ.எஸ்-ன் புதிய பதிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் குளுக்கோஸ் மானிட்டர் மற்றும் ப்ளூடூத் உள்ளிட்ட சாதனங்களுடன் இணைந்து வேலை செய்யும்.
iOS 11
ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களை இயக்கும் iOS 11 ஐமெசேஜ்களை சாதனங்களுக்கு இடையே சிறப்பாக இயக்கி மெமரியை சேமிக்கும்.
மேலும் பழைய போட்டோ மெசேஜ்களை Cloud Storage-ல் சேமித்து சாதனத்தின் மெமரியை பயனுள்ளதாக பயன்படுத்த வழிவகை செய்யும்.
HomePod
சோனாஸ் மற்றும் அமேசான் எக்கோ சாதனங்களுக்கு போட்டியாக ஆப்பிளின் HomePod அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதில் Musicologist என்னும் வசதி இருப்பதால் ஆப்பிள் அக்கவுண்ட் மூலம் பாடல்களை இயக்க சிரியுடன் உரையாடும்.
இதுதவிர 10.5-inch iPad Pro, macOS High Sierra-வும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.