ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உதவ இந்தியா தயாராக இருப்பதாக ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானின் மத்தியப் பகுதியில் கடந்த புதன்கிழமை பூகம்பம் ஏற்பட்டது.
குறிப்பாக, பக்திகா மாகாணத்தில் உள்ள கயான், பர்மாலா, நாகா மற்றும் ஜிருக் மற்றும் கோஸ்ட் மாகாணத்தில் உள்ள ஸ்பெரா மாவட்டமும் கடுமையாக பாதிக்கப்பட்டன.
பூகம்பத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயரிழந்துள்ளனர். மேலும் 2,000 வீடுகள் சேதமடைந்துள்ளன.
இதில், ஏராளமான மக்கள் வீடு, உணவுகளின்றி பரிதவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உதவ இந்தியா தயாராக இருப்பதாக ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் குறித்த பாதுகாப்பு கவுன்சில மாநாடு மற்றும் ஆலோசனை கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது,
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பேரழிவுக்கான நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆப்கானிஸ்தான் மக்களின் துயரத்தை இந்தியா பகிரந்துக் கொள்கிறது. மேலும், இந்த நேரத்தில் உதவி மற்றும் ஆதரவை வழங்கவும் தயாராக உள்ளது.