ஆப்கானிஸ்தானில் பள்ளிகள் திறக்கப்பட்ட சில மணி நேரங்களில் மாணவிகள் வீட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.
ஆப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்ட் மாதம் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். அதன்பின்னர் அங்கு பெண்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பெண் குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டது.
இதனிடையே கொரோனா காரணமாகவும் கல்வி நிலையங்கள் மூடப்பட்டிருந்தன. கடந்த அக்டோபர்- நவம்பர் மாதங்களில் பாடசாலைகள் திறக்கப்பட்ட நிலையில் 12 வயதுக்கு கீழ் உள்ள சிறுமிகள் மட்டுமே பள்ளிக்கு அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் உயர்நிலை, மேல்நிலைப் பாடசாலைகளில் பயிலும் மாணவிகள் 7 மாதங்களுக்குப் பிறகு இன்று பாடசாலை சென்றனர்.
மாணவிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை தலிபான்கள் அகற்றியுள்ள சூழ்நிலையில் 12 முதல் 19 வயது வரையிலான மாணவிகள் இன்று பாடசாலைக்குச் சென்றனர்.
ஆனால் பாடசாலைகள் திறக்கப்பட்ட சில மணி நேரங்களில் மாணவிகள் வீட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர். தலிபான்கள் உத்தரவின் பெயரில் மாணவிகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இது குறித்து ஆப்கானிஸ்தான் கல்வி அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அஜீஸ் அஹ்மத் ரேயான் கூறுகையில், “இது குறித்து கருத்து தெரிவிக்க எங்களுக்கு அனுமதி இல்லை” என தெரிவித்தார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]