ஆப்கானிஸ்தானின் சிறுமிகளின் கல்விக்கான திட்டமொன்றின் ஸ்தாபகர், தலிபான் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார் என ஐநா இன்று தெரிவித்துள்ளது.
‘பென்பாத்1’ (Penpath1) எனும் திட்டத்தின் தலைவரான மதியுல்லாஹ் வெசா, காபூல் நகரில் நேற்று திங்கட்கிழமை கைது செய்ய்பபட்டுள்ளார் என ஐக்கிய நாடுகள் தெரிவித்துள்ளது.
மதியுல்லாஹ் வெசா கைது செய்யப்பட்டதை அவரின் சகோதரர் சமியுல்லா வெசா உறுதிப்படுத்தியுள்ளார்.
திங்கட்கிழமை மாலை, தொழுகையின் பின்னர் பள்ளிவாசலுக்கு வெளியே வைத்து மதியுல்லாஹ்வை சிலர் மறித்தனர். அந்நபர்களின் அடையாள அட்டையை மதியுல்லா கேட்டபோது, அவரை அந்நபர்கள் தாக்கி, பலவந்தமாக கொண்டு சென்றனர் என சமியுல்லா வெசா கூறியுள்ளார்.