டுபாயில் இடம்பெற்றுவரும் ஐ.பி.எல் போட்டிகளை ஆப்கானிஸ்தானில் ஒளிபரப்ப தலிபான் அமைப்பு தடை விதித்துள்ளது.
மைதானத்தில் பெண் பார்வையாளர்கள் இருப்பதால் ஐ.பி.எல். போட்டிகளை தங்கள் நாட்டில் ஒளிபரப்ப அனுமதிக்க முடியாது என்று தலிபான்கள் அரசு அறிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
இது குறித்து ஆப்கானிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் முன்னாள் செய்தித் தொடர்பாளரும், அந்த நாட்டு செய்தி நிறுவனம் ஒன்றுடன் இணைந்து பணியாற்றி வரும் ஊடகவியலாளருமான பவாத் அமான் டுவிட்டரில் வெளியிட்டுள்ள தகவலில்,
ஆப்கானிஸ்தானில் ஐ.பி.எல் போட்டிகளின் ஒளிபரப்புக்குத் தலிபான் தடை விதித்துள்ளது.
பெண்கள் நடனமாடுவதாலும், மைதானங்களில் பெண் பார்வையாளர்கள் மற்றும் ரசிகர்கள் இருப்பதாலும் அதை ஒளிபரப்பக் கூடாது என்று ஆப்கானிஸ்தான் ஊடகங்களை தலிபான் எச்சரித்துள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தான் தாலிபன் அமைப்பினால் கைப்பற்றப்பட்டது. ஆப்கான் கைப்பற்றப்பட்டபோதே அங்கு கலை, கல்வி, விளையாட்டு ஆகிய துறைகளில் முக்கிய மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
அந்தவகையில், பெண்கள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவது அவசியமில்லை என தாலிபன் கலாசார அமைப்பின் துணைத் தலைவர் அகமதுல்லா வாசிக் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.
அந்த அறிவிப்புக்கு சர்வதேச அளிவில் கண்டனக் குரல்கள் எழுந்தன.
தாலிபான் எச்சரிக்கை அதைதொடர்ந்து, தற்போது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை ஆப்கானிஸ்தானில் ஒளிபரப்ப தாலிபான் அரசு தடை விதித்துள்ளது.
போட்டிகளின்போது சியர் லீடர்ஸாக பெண்கள் நடனமாடுவது, மைதானத்தில் பார்வையாளராக பெண்கள் அமர்ந்திருப்பது போன்ற காரணங்களால் இந்த தடை உத்தரவை தாலிபான் பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]