ஆப்கானிஸ்தானில் தற்கொலைபடை தாக்குதலில் போலீசார் உள்பட 15 பேர் பலியாகினர்.
ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூல் புறநகரின் பனாயி என்ற பகுதியில் தனியார் கட்டடத்தில் இரவு நேரத்தில் தற்கொலைப்படை தாக்குதல் நடந்தது.
கார் குண்டு தாக்குதல் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் 5 போலீசார் உள்பட 15 பேர் உடல்சிதறி பலியாயினர். 25 பேர் காயமடைந்தனர்.
இத்தாக்குதலுக்கு எந்த அமைப்பு பொறுப்பேற்றது என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. தாக்குதலையடுத்து தூதரகங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.