ஆப்கானிஸ்தானில் இருந்து 7,000 க்கும் அதிகமானவர்களை வெளியேற்றியுள்ளதாக பிரிட்டன் திங்களன்று தாமதமாக அறிவித்தது.
பாதுகாப்பு சூழ்நிலை அனுமதிக்கும் வரை வெளியேற்றும் செயல்முறை தொடங்கும் என்றும் வெளியேற்றலுக்கான விமானங்களின் இறுதித் திகதி எதுவும் நிரிணயிக்கப்படவில்லை என்றும் பிரிட்டன் கூறியுள்ளது.
ஆகஸ்ட் 13 வெள்ளிக்கிழமை தொடங்கிய பிரிட்டனின் வெளியேற்றலின் கீழ் ஆப்கானிஸ்தானில் இருந்து மொத்தம் 7,109 நபர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
காபூலில் 1,000 க்கும் மேற்பட்ட பிரிட்டனின் ஆயுதப்படை வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர் என்று அது கூறியது.
வெளியேற்றப்பட்டவர்களில் தூதரக ஊழியர்கள், பிரிட்டிஷ் நாட்டவர்கள், ஆப்கானிஸ்தான் இடமாற்றம் மற்றும் உதவி கொள்கை திட்டத்தின் கீழ் தகுதி பெற்றவர்கள் மற்றும் கூட்டாளர் நாடுகளைச் சேர்ந்தவர்கள் அடங்குவர் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.