ஆப்கானிஸ்தானின் காபுல் நகரில் உள்ள இந்திய தூதரகம் மீது ராக்கெட் குண்டு வீசப்பட்டுள்ளதாகவும், இந்த தாக்குதலால் இந்தியர்கள் யாருக்கும் பாதிப்பு இல்லை என வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் வெளிநாட்டு தூதரகங்கள் அமைந்துள்ள பகுதியில் ராக்கெட் குண்டு வீச்சுதாக்குதல்நடந்தது. இதில் இந்திய தூதரகத்தின் மிக அருகே உள்ள வேலியில் இந்த குண்டு விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலால் குறித்து வெளியுறவு செய்தி தொடர்பாளர் ராவீஷ் குமார் ட்விட்டரில் கூறியது, தூதரக கட்டிடத்தில் சேதங்கள் இல்லை ராக்கெட் குண்டு வீசப்பட்டதா என்பதும் உறுதியாக தெரியவில்லை என்றார். மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா கூறுகையில், தாக்குதலால் இந்திய ஊழியர்கள் யாருக்கும் பாதிப்பும் இல்லை என்றார்.