கியூபெக்கைச் சேர்ந்த 34 வயது பெண் ஒருவர் மேற்கு ஆபிரிக்க நாடானா புர்க்கீனோ ஃபாசோவில் காணாமல் போயுள்ளார்.
இத்தாலியைச் சேர்நத 30 வயதுடைய ஆண் நண்பருடன் ஆபிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த நிலையில், புர்க்கீனோ ஃபாசோ ஊடாக சென்ற வேளையில் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த டிசம்பர் மாதம் 15ஆம் திகதிக்குப் பின்னர் அவர்களிடம் இருந்து எந்தவித தகவலும் இல்லை என்று கனேடிய பெண்ணின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
அவர்களுடனான அனைத்துவித தொடர்புகளும் முற்றாக அற்றுப் போயுள்ளதனால், அவர்களின் பாதுகாப்பு தொடர்பில் தாம் மிகுந்த கவலை கொள்ளவதாக காணாமல் போன பெண்ணின் சகோதரி கனேடிய ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
குடும்ப உறுப்பினர்களால் வெள்ளிக்கிழமை முகநூலில் இடம்பட்ட பதிவு ஒன்றில், அவர்கள் இன்னமும் புர்க்கீனோ ஃபாசோ நாட்டின் எல்லையைக் கடந்து செல்லவில்லை என்றும், அருகில் உள்ள நாடுகளுக்கான விசாவை இன்னமும் அவர்கள் பெற்றுக்கொள்ளவில்லை என்றும் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை கனேடியர் ஒருவர் புர்க்கீனோ ஃபாசோவில் காணாமல் போனதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதை தாமும் அறிந்துள்ளதாக, கனேடிய வெளியுறவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த நாட்டில் உள்ள கனேடிய தூதரக அதிகாரிகள் அந்த நாட்டு அதிகாரிகளுடன் இது தொடர்பில் மேலதிக தகவல்களைப் பெற்றுக் கெள்வது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் அந்த திணைக்கலாமா மேலும் தெரிவித்துள்ளது.