ஜனவரி மாத ஆரம்பத்தில் இருந்து, செய்ன் நதியின் நீர் மட்டம் மிக விரைவாக உயர்ந்து வருகின்றது. இது மெது மெதுவாகத் தலைநகரத்திற்குள் வெள்ள ஆபத்தை உருவாக்கிக் கொண்டுள்ளது.
4.5 மீற்றர் உயரத்தைத் தாண்டி இருக்கும் செய்ன் நதி, மிக விரைவாக ஒரு சில நாட்களிற்குள் 5 மீற்றரைத் தாண்டிவிடும் என, வெள்ள ஆபத்துகளிற்கான தகல் மையமான Vigicrues (Service d’information sur le risque de crues) எச்சரித்துள்ளது.
பரிஸ் செய்ன் நதி மட்டத்திற்கான இந்த அளவீடுகள், பரிசின் ஒஸ்ரலிட்ஸ் பகுதியில் உள்ள, ஆழ் சத்த முறை (Austerlitz – Station ultrason) மூலம் அளவிடப்படுகின்றது.