ஆபத்தான நாய்கள் வைத்திருப்பவர்களிற்கு கடுமையான புதிய சட்டங்கள்?
கனடா- ரொறொன்ரோ,மனிதர்களை அல்லது மற்றய செல்லப்பிராணிகளை கடிக்கும் நாய்களின் சொந்தக்காரர்கள் வெகுவிரைவில் கடுமையான புதிய விதிகளை சந்திக்க நேரிடும் என கூறப்படுகின்றது.புதிய சட்டம் நாய் சொந்தக்காரர்கள் அவர்களது பகுதிக்குள் எச்சரிக்கை குறியீடு ஒன்றை வைக்க வேண்டும் மற்றும் நாயும் ஆபத்தானது என்பதை குறிக்கும் குறி ஒன்றை அணிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றது.
உரிமம் மற்றும் தரநிலை குழு இது குறித்து அடுத்த வாரம் விவாதிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனிதர் ஒருவரை அல்லது வீட்டு செல்லப்பிராணியை கடுமையாக கடித்தமை போன்ற ஆபத்தான நிலைமைகள் ஏற்பட காரணமாக இருந்த நாய்களிற்கு இப்புதிய சட்டம் ஏற்படுத்தப்படும்.
நாய் சொந்தகாரர்கள் தெளிவாக தெரியக்கூடிய பகுதியில் எச்சரிக்கை அடையாளத்தை வெளிப்படுத்த வேண்டும். அவர்களது நாய்க்கு நகரத்தால் விற்பனை செய்யப்படும் ஆபத்தான நாய் குறியீட்டை அணிவிக்க வேண்டும் என புதிய சட்டம் உள்ளடக்கும்.
அதே போல் ஆபத்தான நாய்களிற்கு சொந்தகாரர்களின் உடைமைகளை விட்டு வெளியே செல்லும் எந்நேரமும் வாய் மூடிபோடுதல் மற்றும் நாய் வார் பூட்டுதல் போன்றனவும் புதிய சட்டம் மூலம் அமுல்படுத்தப்படும் என கூறப்படுகின்றது. இலகுவாக அடையாளம் காணவும் கண்காணிக்கவும் மைக்ரோ சிப் பொருத்துவதும் அடங்கும்.
நாய்களின் சொந்தக்காரர்கள் நாய்கள் தகைமை பயிற்சி பெற்றமைக்கான சான்றை நகரத்திற்கு வழங்க வேண்டும்.
ரொறொன்ரோவில் மதிப்பீட்டின் பிரகாரம் 230,000நாய்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அறிக்கை செப்டம்பர் 21 விவாதிக்கப்படவுள்ளது.