ஆன்லைன் கல்வியறிவு பரீட்சையில் தொழில் நுட்ப பிரச்சனை.சைபர் தாக்குதல் பொறுப்பு.
கடந்த வாரம் இடம்பெற இருந்த ஒன்ராறியோ-ரீதியிலான இணையத்தள கல்வியறிவு பரீட்சை ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் சைபர் தாக்குதல் என கல்வி தரம் மற்றும் கணக்கு தணிக்கை அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.
அக்டோபர் 20ல் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒன்ராறியோ மேன்நிலை பள்ளி மாணவர்கள் இப்பரீட்சையில் பங்கு பற்ற இருந்தனர். ஆனால் தொழில் நுட்ப கோளாறு காரணமாக இந்த மதிப்பீட்டை முடிக்க முடியவில்லை.
மாகாணத்தின் இத் தரப்படுத்தப்பட்ட பரீட்சை தடைப்பட்டதற்கு காரணமாக இருந்தது தீங்கிழைக்கும் மற்றும் மறுப்பு சேவை தாக்குதல் காரணம் என EQAO அறிவித்துள்ளது.
சைபர் தாக்குதல் இருந்த போதிலும் இந்த மதிப்பீடு வெற்றிகரமாக இணையத்தளம் மூலம் நடாத்தப்படும் என்ற நம்பிக்கை உள்ளதாக EQAO தெரிவித்துள்ளது.
இந்த மாதம் இடம்பெற்ற இணையத்தள பரீட்சை ஒரு சோதனை ஓட்டம் எனவும் இதனை மாணவர்கள் முடிக்க முடிந்திருந்தால் சோதனையில் தோல்வியடைந்த மாணவர்களிற்கு அபராதம் விதிக்கப்படமாட்டாது.
கட்டாய எழுத்தறிவு பரீட்சை மார்ச் மாதம் இடம்பெறுகின்றது.