ஆனந்த் சந்திரசேகரனை ‘வளைத்துப்போட்ட’ பேஸ்புக், யார் இவர்..?
முன்னாள் யாகூ இன்க், ஸ்னாப்டீல் மற்றும் பார்தி ஏர்டெல் நிர்வாகியாக பணிபுரிந்த ஆனந்த் சந்திரசேகரன் அவர்களை பேஸ்புக் நிறுவனம் தனது பேஸ்புக் மெசன்ஞ்சர் ஆப் சார்ந்த உத்திகள் உருவாக்க பணிக்காக வேலைக்கு அமர்த்தியுள்ளது, இது சார்ந்த அறிவிப்பை கடந்த திங்களன்று வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்டுள்ளது.
கடந்த மே மாதம் ஸ்னாப் டீல் நிறுவன வேலையில் இருந்து விடுபட்ட சந்திரசேகரன் அடுத்தகட்டமாக ஒரு பெரிய தொழில் முனைவோராக உருவாவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது அதற்கு பதிலாக, அவர் அமெரிக்காவின் மென்லோ பார்க்கில் உள்ள பேஸ்புக் அலுவலகத்தில் இணைந்துள்ளார்.
38 வயது நிரம்பிய சந்திரசேகரன் ஏரோப்ரிஸ் என்ற ஒரு தனிப்பட்ட மொபைல் பயன்பாடுகள் மென்பொருள் நிறுவனத்தின் இணை நிறுவனராவர் பின்னர் அந்நிறுவனம் 2011-ல் பிஎம்சி சாப்ட்வேர் இன்க் மூலம் கைப்பற்றப்பட்டது. பின்னர் ஜாஸ்பர் இன்போடெக் பிரைவேட் லிமிடெட் மூலம் நடத்தப்படும் ஸ்னாப்டீலில் சந்திரசேகரன் சந்தையின் இணையதளம் மற்றும் ஆப் சீரமைக்கப்பட்ட பதிப்பு ஆகிய பணிகளில் சிறப்பான முறையில் பணியாற்றி பாராட்டப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பேஸ்புக் நிறுவனத்துடன் இணைந்தது குறித்து “சிறந்த பயணங்கள் உங்கள் வீட்டை அடையச்செய்யும்” என்ற தனது மகிழ்ச்சியை ஆனந்த் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.