ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் பஸ் ஒன்று நீரோடையில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
47 பேருடன் பயணித்த பஸ்ஸொன்றை புதன்கிழமை காலை ஜல்லேரு வாகு என்ற நீரோடையில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. உயிரிழந்தவர்களில் பஸ்ஸின் சாரதியும், 5 பெண்களும் அடங்குவர்.
இந்த விபத்து குறித்து கவலை தெரிவித்துள்ள ஆந்திர மாநில ஆளுநர் பிஸ்வா பூஷன் ஹரிசந்தன், காயமடைந்தவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குமாறு மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]