நடிகர் மகத் – பிராச்சி தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
அஜித் நடிப்பில் வெளிவந்த மங்காத்தா மற்றும் ஜில்லா, வந்தா ராஜாவா தான் வருவேன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவரே நடிகர் மகத். பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்று பெரிய அளவில் பிரபலமானவராவார்.
இவர் பிராச்சி மிஸ்ரா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சமீபத்தில் தனது மனைவி பிராச்சி மிஸ்ரா கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். இந்நிலையில் இந்த தம்பதியினருக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதை நடிகர் மகத் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நடிகர் மகத் – பிராச்சி தம்பதியினருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறமையும் குறிப்பிடதக்கது.