இவ்வாண்டின் இறுதி சந்திர கிரகணத்தை கண்டுகொள்ளும் வாய்ப்பு இலங்கையர்களுக்கும் கிடைத்துள்ளது.
இன்று (07) இரவு 10.53 மணியிலிருந்து ஒரு மணித்தியாலமும் 55 நிமிடங்களும் இந்த சந்திக்கிரகணம் தோன்றும் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பகுதி சந்திர கிரகணத்தின் (Partial lunar eclipse) போது சந்திரனின் 25 வீதமான பகுதி பூமியின் நிழலால் மூடப்படும் என கொழும்பு பல்கலைக்கழக வானியல் மற்றும் விண்வெளி கல்விப் பிரிவு பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த பகுதி சந்திர கிரகணத்தை தொடர்ந்து எதிர்வரும் 21 ஆம் திகதி சூரிய கிரகணமொன்று இடம்பெறவுள்ளது எனினும், அது இலங்கையர்களுக்கு தென்படாது என்பது குறிப்பிடத்தக்கது.