ஆண்களை நேசிக்கும் பெண்களுக்கு மட்டும்!

ஆண்களை நேசிக்கும் பெண்களுக்கு மட்டும்!

மிக அழுத்தமான மனச்சோர்வு அல்லது உளச்சோர்வு காரணமாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ள, ஆனால் வெளியே சொல்ல முடியாமல் துன்பப்படும் ஆண்கள் ஏராளம்.

குடும்பச் சுமை, பொருளாதாரச் சுமை, உறவுகளின் தாக்கம், தொழில் ரீதியான அழுத்தங்கள் என்று எமது மக்கள் பல்வேறு பிரச்சனைகளுக்கும் மிக அதிகம் முகம் கொடுக்கிறார்கள். குறிப்பாக, மனஅழுத்தத்தால் பாதிக்கப்படும் பெண்களுக்கும் இளையவர்களுக்கும் கொடுக்கப்படும் கவனமும் கவனிப்பும் கவனயீர்ப்பும், ஆண்களுக்கு வழங்கப்படுவதில்லை.

உண்மையைச் சொன்னால் ஆண்கள் யாரும் தங்கள் மனஅழுத்தம் பற்றி வெளியே காட்டிக்கொள்வதில்லை. அப்படிக் காட்டிக்கொள்வதை அல்லது அதுபற்றிப் பேசுவதைக்கூட, தங்களது பலவீனமாக யாரும் எடுத்து விடுவார்கள் என்று அஞ்சுகிறார்கள். அதனால் மனதுக்குள் வைத்து தனியே அவதிப்படுகிறார்கள்.

இப்படி உளச்சோர்வுக்கு உள்ளாகும் ஆண்கள் நாளடைவில் குடிபோதைக்கும், புகைத்தலுக்கும் ஏனைய தீய பழக்கங்களுக்கும் அடிமையாகி, குடும்பத்தால் வெறுக்கப்படும் அளவிற்கு நிலைமை மோசமடைகிறது. இதற்குள் இவர்களை ஏனைய உடல் வருத்தங்களான கொலஸ்ரோல், டயபட்டீஸ், பிரசர் மற்றும் இதயநோய் போன்ற பலவும் ஆட்கொள்ள, தற்கொலை வரை நிலைமை மோசமடைகிறது.

கடந்த சில வாரங்களில் மட்டும் காதும் காதும் வைத்தாற்போல் சில தற்கொலைகள் நடைபெற்றுள்ளன. கனடாவில், ஓடும் ரயிலில் பாய்ந்தும், வாகனத்திற்குள் கார்பனீரொக்சைட்டை அதிக அளவில் வெளியேற்றியும், உயர்மாடியிலிருந்து பாய்ந்தும், ஆண்கள் தற்கொலை செய்வது அதிகரித்து வருகிறது.

இவர்களை பாதுகாக்கும் வண்ணம் கனடாவில் ஆண்களின் மன ஆரோக்கியத்திற்கான அமைப்பு (Mens Services for Mental Health) ஒன்றை தமிழர்கள் நடத்தி வருகின்றனர்.

இவர்கள் இந்த அமைப்புக்கான நிதி திரட்டுவதற்காக வரும் யூன் 4ம் திகதி, Toronto-ல் உள்ள Scarborough Convention Centre-ல், இளம் கலைஞர்களின் நடன நிகழ்ச்சியை நடத்தவுள்ளனர்.

 

 

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News