எம்மில் பலரும் மார்பக புற்றுநோய் என்பது பெண்களை மட்டுமே தாக்கக்கூடிய நோய் என அறிந்திருக்கிறோம்.
மார்பக புற்று நோயால் ஆண்டு தோறும் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கையில், ஒரு சதவீதத்திற்கும் கீழாக ஆண்களுக்கும் மார்பக புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் என கண்டறியப்பட்டிருக்கிறது.
தோராயமாக ஓராண்டுக்கு 2700 ஆண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக கண்டறியப்பட்டால், அவர்களின் 530 பேர் இதன் காரணமாகவே மரணத்தை எதிர்கொள்கிறார்கள். எனவே ஆண்களுக்கும் மார்பக புற்றுநோய் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
ஆண்களின் மார்பக திசு அல்லது தசை என்பது அளவில் குறைவானதாக இருப்பதால், இங்கு புற்றுநோய் கட்டிகள் உருவானால் அவை பெண்களை விட விரைவாக பரவி, பாதிப்பை பாரிய அளவில் ஏற்படுத்தும்.
தோல் அல்லது தசை பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே 50 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் தங்களது மார்பக பகுதியில் ஏதேனும் கட்டிகள் இருப்பதாக உணர்ந்தால், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
குறிப்பாக ஆண்களின் மார்பகத்தில் உண்டாகும் கட்டியின் அளவு இரண்டு சென்டிமீற்றர் மேல் இருந்தால், அவர்கள் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக பொருள் கொள்ளலாம். இவர்களுக்கு உடனடியாக சத்திர சிகிச்சை, கதிரியக்க சிகிச்சை கீமோதெரபி போன்ற சிகிச்சைகளை தனித்தனியாகவோ அல்லது ஒருங்கிணைந்தோ அளித்து அவர்களை பாதிப்பிலிருந்து விடுவிக்க வேண்டும்.
பொதுவாக ஆண்களின் மார்பக புற்றுநோய் பாதிப்பிற்கு ஹோர்மோன் தெரபி எதிர்பார்த்த அளவிற்கு பலனை அளிப்பதில்லை. ஆனால் சிலருக்கு ஹோர்மோன் தெரபி தேவைப்படலாம். சிலருக்கு திசு பரிசோதனை மூலம் மார்பக புற்றுநோய் உறுதிப்படுத்தப்பட்டாலும், அதனை குணப்படுத்த பத்து ஆண்டுகள் வரை கூட சிகிச்சைகள் எடுக்க வேண்டியதிருக்கும்.
டொக்டர் குமரன்
தொகுப்பு அனுஷா.