ஆணைக்குழு அறிக்கைகள் தொடர்பில் எதிர்வரும் 06 ஆம் திகதி முழுமையான விவாதம் நடாத்த அவகாசம் போதாதெனின், கட்சித் தலைவர்களின் உடன்பாட்டுடன் தேவையான அளவிற்கு மேலும் நாட்களை ஒதுக்கிக் கொள்ள முடியும் என சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பிணைமுறி மோசடி சம்பந்தமான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் பாரிய ஊழல் மோசடிகள் சம்பந்தமான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை ஆகியன தொடர்பில் விவாதம் நடத்துவதற்கு கட்சித் தலைவர்களின் இணக்கத்துடன் தேவையான அளவுக்கு நாட்களை ஒதுக்கிக் கொள்ள முடியும் என்றும் சபாநாயகர் அலுவலகம் கூறியுள்ளது.
சபாநாயகர் அலுவலகம் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் இதனைக் குறிப்பிட்டுள்ளது.
பெரும்பாலான கட்சித் தலைவர்களின் உடன்பாட்டுடன் எதிர்வரும் 06 ஆம் திகதி அறிக்கைகள் தொடர்பில் விவாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.