சீனாவின் நிதியுதவியுடன் கூடிய வெளிநாட்டுத் திட்டங்கள், இலங்கை உட்பட அந்நாடுகளின் ஆட்சியாளர்களுக்கு நிதியைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் காணப்படுவதாக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள ‘பேங்கிங் ஆன் பெய்ஜிங்’ என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட ‘பேங்கிங் ஆன் பெய்ஜிங்’ என்ற நூலில் சீன நிதி உதவி பெறும் நாடுகளின் தலைவர் ஆட்சியில் இருந்த காலப்பகுதியில் நிதி வழங்கல் 52 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்தல்களுக்கு முன்னதாக, முக்கிய தலைவர்களின் தொகுதிகள் பெரும்பாலும் சீன அரசாங்கத்தின் ஆதரவு நிதியில் கூர்மையான அதிகரிப்பைக் வெளிப்படுத்துகின்றன.
இலங்கையில், 2005-2015 காலப்பகுதியில் அம்பாந்தோட்டை மாவட்டத்தை (12,000 குடியிருப்பாளர்கள் மட்டுமே வசிக்கும்) இரண்டாவது தலைநகராக மாற்ற முயன்றதுடன் ஒரு பெரிய சர்வதேச விமான நிலையம் உட்பட, சீன ஆதரவு உட்கட்டமைப்பு திட்டங்கள் கூடுதலாக முன்னெடுக்கப்பட்டன.
சீனர்களால் கட்டப்பட்ட அம்பாந்தோட்டை துறைமுகமானது இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் பெய்ஜிங்கின் மூலோபாய நோக்கத்திற்கானது.
இதே போன்று மேற்கு ஆபிரிக்க மாநிலமான சியரா லியோனில், 2007 இல் எர்னஸ்ட் பாய் கொரோமா ஜனாதிபதியாக பதவியேற்றபோது, அவரது சொந்த மாவட்டமான பொம்பாலி, நாட்டின் நான்கு அதிக மக்கள்தொகை கொண்ட மாவட்டங்களில் ஒன்றாகும்.
ஆனால் மிகவும் ஏழ்மையான மாவட்டங்களில் ஒன்றாகுவும் அமைந்துள்ளது. ‘பேங்கிங் ஆன் பெய்ஜிங்’ தகவலின் படி, அவர் அரசியல் நட்சத்திரமாக உயர்ந்தது, சீன நிதியின் காரணமாக மாவட்டத்தின் நிலைமையை விரைவாக மாற்றியதாலாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோமாவின் இரண்டாவது பதவிக்காலத்தின் முடிவில், அவரது மாவட்டத்தின் தலைநகரான மகேனி, 24 மணி நேர மின்சாரம் கொண்ட சில இடங்களில் ஒன்றாக இருந்தது என்றும் ‘பேங்கிங் ஆன் பெய்ஜிங்’ என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.