தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம்வரும் சந்தானம், அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம்வந்த சந்தானம், தற்போது படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். இவர் கைவசம் டிக்கிலோனா, மன்னவன் வந்தானடி, சர்வர் சுந்தரம், சபாபதி என ஏராளமான படங்கள் உள்ளன.
இந்நிலையில், நடிகர் சந்தானம், அடுத்ததாக நடிக்க உள்ள புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி மேயாத மான், ஆடை போன்ற படங்களை இயக்கிய ரத்ன குமார் இயக்கத்தில் சந்தானம் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குனர் ரத்ன குமார், சமீபத்தில் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான மாஸ்டர் படத்தில் வசனகர்த்தாவாக பணியாற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://Facebook page / easy 24 news