அரச உத்தியோகத்தர்களின் சம்பளம் மதிப்பாய்விற்குட்படுத்தப்பட வேண்டியதற்கான தேவை உணரப்பட்டுள்ளது.
அதிபர் – ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கான தீர்வு வழங்கப்பட்டுள்ளதே தவிர , அவர்களின் சம்பளம் அதிகரிக்கப்படவில்லை என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு புதன்கிழமை (24)நடைபெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
அரச உத்தியோகத்தர்களின் சம்பளம் மதிப்பாய்விற்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதை நிதி அமைச்சர் பாராளுமன்றத்திலும் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் கடந்த 2006 ஆம் ஆண்டு அரச உத்தியோகத்தர்களின் சம்பளம் மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. தற்போது 15 ஆண்டுகள் கடந்துள்ளன. எனவே தான் அதற்கான தேவை தற்போது எழுந்துள்ளது.
எவ்வாறிருப்பினும் அதிபர் , ஆசிரயர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்படவில்லை. மாறாக 24 ஆண்டுகளாகக் காணப்படும் சம்பள முரண்பாட்டினைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இவ்வாறான சவால்களுக்கு மத்தியில் பொருளாதாரம் கட்டியெழுப்பப்படும் போது சிறந்த முடிவு கிடைக்கப் பெறும் என்றார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]