அரச சேவையில் புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட 23,000 பட்டதாரிகள் பாடசாலையில் இணைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, ஒரு பாடசாலைக்கு ஐவர் என்ற வகையில் பட்டதாரிகள் பாடசாலைகளுக்கு இணைக்கப்படவுள்ளனர்.
சம்பள முரண்பாட்டை தீர்க்கக்கோரி மூன்று மாதங்களுக்கு மேல் தொடர்ச்சியான பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தை முன்னெடுத்து வந்த ஆசிரியர்கள் இன்றும் (21) நாளையும் (22) சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுக்கவுள்ள நிலையில் 10 ஆசிரியர் சங்கங்கள் சேவையை இன்று ஆரம்பித்துள்ளதாக இலஙகை பொதுஜன கல்விச்சேவை சங்கத்தின் தலைவி வசந்தா ஹந்தபான்கொட நேற்று அறிவித்திருந்தமை கவனிக்கத்தக்கது.
இந்நிலையில் பாடசாலையின் அவசியத்துக்கமைய பயிலுநர் பட்டதாரிகள் பாடசாலைக்கு இணைப்பதனூடாக எந்த பிரச்சினையுமின்றி கற்பித்தல் செயற்பாட்டை முன்னெடுக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். உரிய பயிற்சிகளின்றி பயிலுநர் பட்டதாரிகளை பாடசாலையில் இணைப்பதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தபோதிலும் பிரேமதாச ஜனாதிபதியின் ஆட்சிக்காலத்தில் 1000 ரூபா சம்பளத்திற்கு ஆசிரியர்களை இணைத்தமைக்கு அந்த காலத்தில் எப்படியிருந்தாலும் இன்று யாரும் எதுவும் கதைப்பதில்லை. புதிதாக பாடசாலைக்குள் உள்வாங்குபவர்கள் கற்றவர்கள். அவர்களுக்கு பயிற்சிகள் வழங்குவதற்கு தேவையான வளங்கள் உள்ளன.
ஒன்றரை வருடங்களுக்கு மேற்பட்ட காலம் ஆசிரியர்கள் பாடசாலைக்கு வருகைத் தந்து மாணவர்களுக்கு கற்பிக்க முடியாது போனது. எனினும் அவர்கள் ஒவ்வொரு மாதமும் 20ம் திகதி சம்பளத்தை பெற்றுக்கொண்டனர். அவர்கள் கடமையை பூர்த்தி செய்யாவிட்டாலும் ஒரு சதம் குறைவின்றி சம்பளம் பெற்றனர். பணிப்பகிஷ்கரிப்பு காலத்திலும் சம்பளம் பெற்றனர். அரசாங்கம் வழங்கிய மேலதிக கொடுப்பனவான 5000 ரூபாவை சிலர் திருப்பிக் கொடுத்ததை நான் பார்த்தேன். அப்படியானால் அவர்கள் முழு சம்பளத்தையும் தானே திருப்பிக் கொடுத்திருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]