நாட்டின் தற்போதைய நிலையில் ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடியாது என்று அமைச்சரவை ஒரு மனதாக முடிவுசெய்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
நேற்று பிற்பகல் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தைத் தொடர்ந்து ஊடகவியலாளர்களிடம் பேசியபோதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
ஆசிரியர்களின் சம்பளக் கோரிக்கையை நிறைவேற்ற அரசாங்கத்துக்கு 56 பில்லியன் ரூபா செலவாகும், எவ்வாறெனினும் இந்த விடயத்தை வரவுசெலவுத் திட்டத்தில் பரிசீலிப்போம்.
இந்த விவகாரம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாகவும், பேச்சுவார்த்தையின் முடிவுகள் குறித்து தொழிற்சங்கத் தலைவர்களுக்குத் தெரிவிக்கப்படும்.
நாட்டின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு அரசாங்கத்தினால் தற்சமயம் 56 பில்லியன் ரூபா நிதியை செலவழிக்க இயலாது.
போராட்டங்களை நடத்த தொழிற்சங்கங்களுக்கு ஜனநாயக உரிமை உள்ளது. இந்த உரிமையை அரசாங்கம் தடுக்காது என்றும் அமைச்சர் இதன்போது மேலும் கூறினார்.