கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல்களில் பெரும்பாலானவை இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 5 ஆசிய நாடுகளில் தான் நடைபெற்றிருப்பதாக அமெரிக்க தெரிவித்துள்ளது.
சர்வதேச அளவிலான பயங்கரவாத தாக்குதல்கள் கடந்தாண்டு 23 சதவீதமாக குறைந்துள்ளது என்று அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் பயங்கரவாத தாக்குதலால் ஏற்படும் உயிர் சேதங்களும் 27 சதவீதம் குறைந்துள்ளது.
ஈராக்கில் அரசு படைகள் நடத்திய தாக்குதலில் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதை தொடர்ந்து சர்வதேச அளவில் நடக்கும் பயங்கரவாத சம்பவங்கள் குறைந்திருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டு நிகழ்ந்த பயங்கரவாத சம்பவங்களில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய 5 ஆசிய நாடுகளில் தான் 59 சதவீத அளவுக்கு தாக்குதல்கள் நடைபெற்றுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேசமயம் எஞ்சிய 49 சதவீத தாக்குதல்கள் 100 நாடுகளில் நிகழ்ந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத தாக்குதல்கள் அதிகம் நடைபெற்ற நாடுகள் பட்டியலில் ஈரான் முதலிடத்தில் உள்ளது.