ஆசிய உடல் கட்டழகர் போட்டியில் இலங்கை வீரர் அன்டன் புஷ்பராஜ் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
தென் கொரியாவில் நடைபெற்ற 51ஆவது ஆசிய கட்டுமஸ்தான உடலழகர் மற்றும் உடலமைப்பு விளையாட்டுத்துறை வல்லவர் போட்டி நடைபெற்றது.
இதில் 100 கிலோ கிராம் எடைப்பிரிவில் பங்குபற்றிய லூசியன் அன்டன் புஷ்பராஜ் தங்கப் பதக்கத்தை வென்றதுடன் இந்த எடைப்பிரிவுக்கான ஒட்டுமொத்த சம்பியன் பட்டத்தையும் சூடினார்.இவ் வருடப் போட்டியில் 26 ஆசிய நாடுகளைச் சேர்ந்த 350 இற்கும் மேற்பட்ட கட்டுமஸ்தான உடலழகர்கள் எட்டு வெவ்வேறு எடைப் பிரிவுகளில் போட்டியிட்டனர். குவைத்தில் கடந்த வருடம் நடைபெற்ற வவான் க்ளசிக் எக்ஸ்போ 2016 சர்வதேச பளுதூக்கலில் இவர் தங்கப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.