ஆசிய இளையோர் மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கச் செய்வதற்கான இலங்கை குழாமை தெரிவு செய்யும் இறுதிக்கட்ட தெரிவுகாண் போட்டி அடுத்தாண்டு ஜனவரி மாதம் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடத்துவதற்கு இலங்கை மெய்வல்லுநர் சங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த இறுதிக்கட்ட தகுதிகாண் போட்டிகள் முன்னதாக அடுத்தாண்டு பெப்ரவரி மாதம் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த தெரிவுக்காண் போட்டிகளை ஜனவரி மாதத்தில் நடத்து தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 2005 ஆம் ஆண்டிற்கு பின்னர் பிறந்த வீர, வீராங்கனைகளை ஆசிய இளையோர் மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் பங்கேற்கச் செய்வதற்கு ஆசிய மெய்வல்லுநர் சங்கம் முன்னர் தீர்மானித்திருந்தது.
எனினும், கொவிட் அச்சுறுத்தல் காரணமாக இந்த சம்பியன்ஷிப்பில் 2004 இல் பிறந்த வீர, வீராங்கனைகளையும் இப்போட்டிக்கு உட்படுத்துவதற்கு ஆசிய மெய்வல்லுநர் சங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி,அடுத்தாண்டு ஜனவரி 23,24 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள இதற்கான தெரிவுகாண் போட்டிகளில் 2004 ஆண்டில் பிறந்த வீர, வீராங்கனைகளும் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]