ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி ஆசிப் அலியின் அதிரடியில் 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று சுப்பர் 12 சுற்றில் தொடர்ந்து 3 வெற்றிகளை பெற்றுள்ளது.
இருபதுக்கு – 20 உலகக்கிண்ண தொடரில் நேற்று துபாயில் நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.
நாணயச்சுழற்றிசியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்த ஆப்கானிஸ்தான் அணி ஆரம்பத்தில் தடுமாறியது.
76 ஓட்டங்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின், அணித் தலைவர் முகமது நபி, குல்பதின் நயிப் இருவரும் அதிரடியாக ஆடினர்.
இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்கு 147 ஓட்டங்களை சேர்த்தது. முகமது நபி, குல்பதின் நயிப் தலா 35 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதையடுத்து 148 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. ஆரம்ப ஆட்டக்காரர் ரிஸ்வான் 8 ஓட்டங்களுடனும் பகர் சமான் 30 ஓட்டங்களுடனும் முகமது ஹபீஸ் 10 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
அணித் தலைவர் பாபர் அசாம் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 51 ஓட்டங்களுடன் வெளியேறினார். சொய்ப் மாலிக் 19 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் ஆசிப் அலி அதிரடியாக ஆடி ஒரே ஓவரில் 4 சிக்சர்கள் அடித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
இறுதியில், பாகிஸ்தான் 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது. இதன்மூலம் பாகிஸ்தான் மூன்றாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]