மியன்மார் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெற்ற ஆங் சான் சூகி சிறந்த உடல்நலத்துடன் உள்ளதாக அந்த நாட்டு இராணுவ தலைவர் மின் ஆங் ஹ்லேங் தெரிவித்துள்ளார்.
அங்கு ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்ட பின்னர் முதன்முறையாக நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இராணுவ ஆட்சி ஏற்படுத்தப்பட்ட பின்னர் அவர் பொது வெளியில் தோன்றியிருக்கவில்லை.
ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ஆங் சான் சூகி தற்போது தமது வீட்டில் தடுப்புக்காவலில் உள்ளார்.
இந்தநிலையில் எதிர்வரும் சில நாட்களில் அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவார் என மியன்மார் இராணுவ தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் மோசடி இடம்பெற்றுள்ளதாக அவர் மீண்டும் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக கடந்த பெப்ரவரி முதலாம் திகதி முதல் இராணுவ ஆட்சி ஏற்படுத்தப்பட்டதாகவும் மியன்மார் இராணுவ தலைவர் மின் ஆங் ஹ்லேங் தெரிவித்துள்ளார்.