கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு இவ்வருடம் தோற்றவுள்ள மாணவர்களுக்கான மேலதிக வகுப்புக்கள் மற்றும் கருத்தரங்குகளை நாளை மறுதினம் முதல் நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.
குறித்த உத்தரவை மீறி வகுப்புகளை நடத்துவோர் தொடர்பில் முறைப்பாடு கள் கிடைக்கும் பட்சத்தில் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாய கம் டபிள்யூ.எம்.என்.ஜே.புஷ்பகுமார தெரி வித்துள்ளார்.
இது தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீ ட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் 2 ஆம் திகதி வரை 2230 பரீட்சை நிலையங்களில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் குறித்த பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களை இலக்கு வைத்து நடத்தப்படும் மேலதிக வகுப்புக்கள் மற்றும் கருத்தரங்குகளை எதிர் வரும் ஆகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி நள்ளிரவு முதல் நடத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பரீட்சை தொடர்பிலான மாதிரி வினாத்தாள்களை அச்சிடல், அவ ற்றை விநியோகித்தல், மாதிரி வினாத்தாள்களை வழங்குவதாக பதாகைகள் ஒட்டுதல், துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தல் அல்லது அச்சு ஊடகங்கள் மூலம் பிரசாரம் செய்தல் உள்ளிட்ட செயற்பாடுகளுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
குறித்த உத்தரவை மீறி வகுப்புகளை நடத்தும் தனிநபர் அல்லது நிறுவனமொன்றுக்கு எதிராக பரீட்சைகள் திணைக்களத்தின் 1911 என்ற இலக்கத்துக்கோ அல்லது அருகில் இருக்கும் பொலிஸ் நிலையத்துக்கோ தொடர்புகொண்டு அறி விக்க முடியும். முறைப்பாடுகள் தொடர் பில் ஆராய்ந்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட் டுள்ளது.
இம்முறை குறித்த பரீட்சைக்கு 3 இலட்சத்து 15 ஆயிரத்து 27 பரீட்சார்த்திகள் தோற்றுவதற்குத் தகுதி பெற்றுள்ளனர். அவர்களில் 2 இலட்சத்து 37 ஆயிரத்து 943 பாடசாலை பரீட்சார்த்திகளும் 77 ஆயிரத்து 284 தனிப்பட்ட விண்ணப்பதாரிகளும் தோற்றுவதற்கு தகுதிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.