ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் எம்.எச்.எம். அஸ்ரப்பின் மரணம் குறித்த விசாரணை அறிக்கையை காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
அஸ்ரப் விமான விபத்து ஒன்றினால் உயிரிழந்திரந்தார். இந்த மரணம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று நிறுவப்பட்டிருந்தது.
இந்த ஆணைக்குழுவின் அறிக்கையே தற்போது காணாமல் போயுள்ளது. கடந்த 2000ஆம் ஆண்டு அஸ்ரப் பயணம் செய்த ஹெலிகொப்டர் உடைந்து வீழ்ந்து அதில் பயணித்த 14 பேர் உயிரிழந்தனர்.
குறித்த மரணம் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டிருந்தன, மரணம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநயாக்க ஆணைக்குழு ஒன்றை நியமித்திருந்தார்.
கடந்த 2007ஆம் ஆண்டு இந்த அறிக்கையை ஜனாதிபதி செயலகம், தேசிய ஆவணப்பாதுகாப்பு நிறுவனத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அங்கு அறிக்கை காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.