திருகோணமலை உட்துறைமுக வீதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்தனர்.
ஆஸ்திரேலியா நாட்டைச்சேர்ந்த 27 மற்றும் 28 வயதுடைய பல்கலைககழக யுவதிகளே காயமடைந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டது.
மோட்டார் சைக்கிள் இரண்டு ஒன்றை ஒன்று மோதியதிலேயே இந்த விபத்து சம்பவித்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.காயமடைந்த இருவரும் திருகோணமலை பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
ஆஸ்திரேலியாவிலிருந்து கல்வி தொடர்பிலான ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக திருகோணமலை வந்த ஆஸ்திரேலியா யுவதிகளே விபத்துக்குள்ளாகினர்