இலங்கைக்கு எதிரான டெஸ்ட்தொடரில் அவுஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர்களே இரு அணிகளிற்கும் இடையிலான வித்தியாசமாக திகழ்வார்கள் என அணியின் பயிற்றுவிப்பாளர் அன்ரூ மக்டொனால்ட் தெரிவித்துள்ளார்.
காலியில் இடம்பெறவுள்ள முதலாவது டெஸ்ட் போட்டியில் மிட்சல் ஸ்டார்க் பட் கமின்ஸ் கமரூன்கிறீன் ஆகிய வேகப்பந்துவீச்சாளர்களுடன் அவுஸ்திரேலிய அணி களமிறங்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகின்றது.
எனினும் காலியில் பெருமளவிற்கு கவனம் சுழற்பந்து வீச்சின் மீதே காணப்படும்,நேதன் லியோனுடன் இணைந்து பந்துவீசுவதற்கு ஜொன் ஹொலன்ட் அல்லது மிட்ச்செல் ஸ்வெப்சனை அவுஸ்திரேலியா தெரிவு செய்யலாம்.
இலங்கை அணியினரும் சுழந்பந்து வீச்சாளர்களை நம்பியே களமிறங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகின்றது – இலங்கை அணியில் ஐந்து சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர் மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் மாத்திரம் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஆனால் பயிற்றுவிப்பாளர் அன்ரூ மக்டொனால்ட் அவுஸ்திரேலியா தனது பாணியிலேயே விளையாடவேண்டும் என விரும்புகின்றார்.
எங்களின் வேகப்பந்து வீச்சாளர்களே இரண்டு அணிகளிற்கும் இடையிலான வித்தியாசமாக விளங்குவார்கள் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அனைவரும் சுழற்பந்து வீச்சு குறித்து பேசுகின்றன இலங்கைக்கு கடந்த முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டவேளை மிட்ச்செல் ஸ்டார்க் சிறப்பாக பந்து வீசினார் பட் கமின்ஸ் சிறப்பாக பந்துவீச்சை ஆரம்பிப்பார் என அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சாளர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
நாங்கள் எங்கள் எதிரணியை விட சற்றுவித்தியாசமாக விளையாடவேண்டும்,நாங்கள் அவர்களாகயிருக்கமுடியாது நாங்கள் நாங்களாகயிருக்கவேண்டும் என அவர்தெரிவித்துள்ளார்.