அவுஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்கான 20 பேர் கொண்ட இலங்கை அணியில் சேர்க்கப்பட்டிருந்த நுவான் துஷாரா கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேநேரம் இலங்கை அணியின் பயிற்சியாளர் டில்ஷான் பொன்சேகாவும் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலியாவுக்குப் புறப்படுவதற்கு முன்னதாக உயிர்-பாதுகாப்பான குமிழியில் இருக்கும் அணி மற்றும் துணை ஊழியர்களிடையே நடத்தப்பட்ட வழக்கமான பி.சி.ஆர். சோதனையின் போது இருவரும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
துஷாரா மற்றும் பொன்சேகா ஆகியோர் தற்போது கொவிட்-19 நெறிமுறைக்கு உட்பட்டுள்ளனர் மற்றும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் முடிந்த பின்னர் எதிர்வரும் பெப்ரவரி 10 ஆம் திகதி இலங்கை அணியுடன் இணைந்து கொள்வார்கள்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]